பாளையங்கோட்டை சமாதான புரத்தில் மாத சுலப தவணையில் மக்கா மதீனா செல்ல மக்கள் சேவை அலுவலகம் திறக்கப்பட்டது.
பாளையங்கோட்டை சமாதானபுரம் திருச்செந்தூர் ரோடு அல் ஷிபா ஹஜ் உம்ரா சர்வீஸஸ் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. ஏ.வி.ஏ கஸ்ஸாலி தலைமை வகித்தார். பெரிய பள்ளி வாசல் தலைவர் ஆர்.எம். நியமத்துல்லா, தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜமாதுல் உலமா மூத்த தலைவர் டி.டி.எம். ஸலாவுதீன் ரியாஜி அலுவலகத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த அலுவலகம் குறித்து ஏ.வி.ஏ.கஸ்ஸாலி கூறியதாவது. மக்களின் புனித பயணமான மக்கா மதீனா உம்ரா பயணத்தை மாத சுலப தவணை முறையில் பணம் செலுத்தி நிறைவேற்றிட மக்களுக்காக சேவை செய்யவே இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கான மாத தவணை ரூ 2000 முதல் அவர்களால் முடிந்த தொகையை வாங்கி கொள்வோம். இந்த அலுவலகம் மூலமாக கபாவுக்கு மிக அருகில் தங்கும் வசதி, சிறந்த தென்னிந்திய உணவு வகைகள், சிறந்த மார்க்க அறிஞர்களின் வழிகாட்டுதல், புனித தலங்கள் ஜியாரத், மருத்துவ வசதி, வயதானவர்களுக்கு சிறப்பு சேவை , நேரடி விமான சேவை , பாஸ்போர்ட் இல்லாதவர்களுக்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கான வசதி செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஏ.வி.எஸ். காஜா முகைதீன், டாக்டர் கலீல் ரகுமான், நாசர் ,ஷேக் முகைதீன், நாசர் அலி, சாதிக், தில்லை கிருஷ்ணன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, இளங்கோ, பயாஸ் அகமது, ஜெய்லானி, தவ்பீர், நாவஸ், தாவூத் , கனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.