செய்துங்கநல்லூரில் சமுதாயநலக்கூடத்தினை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்துங்கநல்லூர் மிகபெரிய நகரமாகும். ரயில் நிலையம், கருங்குளம் ஒன்றிய அலுவலகம், மின் அலுவலகம், தபால் நிலையம், கல்வி நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்கள் இங்கு உள்ளன. மிகப்பெரிய சந்தையும் புதன் கிழமை தோறும் இங்கு கூடுகிறது. தினமும் பஸ் ஏற சுற்றியுள்ள 10 கிராம மக்கள் வந்து செல்கின்றனர். செய்துங்கநல்லூர் பஞ்சாயத்துக்கு உள்பட்ட 8 குக்கிராமங்களில் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 1996 ஆம் ஆண்டு செய்துங்கநல்லூரில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இங்கு ஓரளவு வசதி உள்ளவர்கள் கூட திருமணம் முடிக்கும் அளவுக்கு வாடகை இருந்தது. இதனால் மக்கள் இக்கூடத்தினை நன்கு பயன்படுத்தி வந்தனர்.
அதன் பிறகு இந்த சமுதாய நலக்கூடத்தினை மேம்படுத்தவே இல்லை. மேலும் உரிய கழிவறை வசதியும் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். இதற்கிடையில் புதன் கிழமை சந்தை விரிவு படுத்தபட்டது. அந்த வேளையில் சமுதாய நலககூட வளாகத்திலும் புதன் கிழமை தோறும் கடைகள் வைககப்பட்டது. மற்ற நாள்களில் இலவச கணசிசிச்சை முகாம், மருத்துவ முகாம், அரசு நிகழ்வுகள் இங்கு நடந்து வந்தது. அதோடு மட்டுமல்லாமல் மிகவும் ஏழ்மையான மககளும் இங்கே தங்களது இல்ல விழாககளை குறைந்த கட்டணத்தில் நடத்தி வந்தனர். தற்போது இந்த சமுதாய நலககூடம் மிக மோசமான நிலையில் உள்ளது.
இது குறித்து இப்பகுதி மககள் கூறும் போது, ஏழை எளிய மக்களுக்கு இந்த சமுதாய நலக்கூடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் இங்கு கழிவறை வசதி இல்லை.
ண்டபத்தில் கட்டப்பட்ட சமையலறை உடைந்து கிடக்கிறது. இந்த சமுதாய நலக்கூடத்தினை மேம்படுத்தினால் மக்கள் பயன் பெறுவார்கள்.தற்போது சந்தையை மேம்படுத்த அரசு நிதி ஒதுககீடு செய்துள்ளது. இந்த பணத்தில் சமுதாயநலககூடத்தினை மேம்படுத்த வேண்டும் என்று கூறினார்கள்.
மக்கள் பிரச்சனை போக்க சமுதாய நலக்கூடத்தினை மேம்படுத்த வேண்டும். மேலும் கழிவறை உள்பட பல வசதியை செய்து தரவேண்டும் என்று செய்துங்கநல்லூர் பகுதி மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது செய்துங்கநல்லூர் நவீன வசதி கொண்ட திருமண மண்டபம் மூன்று உள்ளது. அனைத்து மூர்த்தங்களிலும் இங்கு திருமணம் நடைபெறுகிறது. ஆனால் மிகவும் பழமையான இந்த திருமண மண்டபம் மேம்படுத்தப்படாமல் இருப்பதால் முகூர்த்தம் நடைபெறவில்லை. சமுதாய நலக்கூடம் மேம்படுத்தினால் புதன் கிழமையை தவிர மற்ற நாள்களில் குறைந்த வாடகையில் மக்கள் நலன் பெறலாம்.