செய்துங்கநல்லூர் சேவியர் பாலி டெக்னிக்கல்லூரியில் நடந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். துணை முதல்வர் அன்சலாம் ரோசர் முன்னிலை வகித்தார். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ஆறுமுகசேகர் வரவேற்றார்.
தேசிய கொடி ஏற்றப்பட்டு மாணவர்களுக்கு செய்தி வழங்கப்பட்டது. விழாவில் துறை தலைவர்கள், வெங்கடேஷ், ஜான்ஸ் செண்பகதுரை, ஜாய்ஸ்மேரி மூத்த விரிவுரையாளர்கள் சந்திரசேகர், முகம்மது பாரூக், அலுவலக கண்காணிப்பாளர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். உடற்கல்வி இயக்குனர் ராகுல் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டிபன் தலைமையில் கல்லூரி ஊழியர்கள் செய்திருந்தனர்.