
செய்துங்கநல்லூரில் மருத்துவ முகாம் நடந்தது.
செய்துங்கநல்லூர் சமுதாய நலககூடத்தில் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி சதக்கத் கிராம மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பில் ஒரு நாள் மருத்துவ முகாம் நடந்தது. Êசங்கரன்கோயில் அரசு பொதுநலம் மற்றும் தோல் நோய் மருத்துவர் ஆஷா நோயாளிகளுக்கு தோல் மற்றும் சர்க்கரை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருத்துவம் பார்த்தார்.
சுமார் 100க்கு மேற்ப்பட்டவர் இதில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். நிகழச்சி ஏற்பாடுகளை சதக்கத்கிராம மேம்பாட்டுத்திட்ட அலுவலர் ரம்யா மற்றும் கணிதத் துறை பேராசிரியை முனைவர் செய்யதலி பாத்திமா மற்றும் இரண்டாம் ஆண்டு கணிதத் துறை மாணவர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.