செய்துங்கநல்லூர் அரசு நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடந்தது.
வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி தலைமை வகித்தார்.கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். துணை தலைவர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஓய்வு பெற்ற தொலை தொடர்பு அதிகாரி முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கூட்டத்தில் மறைந்த நூலகர் துரைராஜ் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சண்முகம், மணக்கரை போஸ்ட் மாஸ்டர் காளிமுத்து, போக்குவரத்து துறை ஜீவா, கணேசன், செல்லப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். நூலகர் லெட்சுமணகுமார் நன்றி கூறினார்.


