
செய்துங்கநல்லூரில் பேராசிரியர் அன்பழகன் மறைவை முன்னிட்டு, திமுகவினர் அவர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
செய்துங்கநல்லூர் திமுக கிளை சார்பில் நடந்த நிகழ்வுக்கு பட்டன் தலைமை வகித்தார். டாக்டர் கலீல்ரகுமான் முன்னிலை வகித்தார். விவசாய சங்க தலைவர் குமார் அன்பழகன் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் காஜா முகைதீன், தர்மலிங்கம், முத்துசாமி, பூல்பாண்டி, சகாயம், மாரியப்பன், சுப்பையா, மாடசாமி ஓய்வு பெற்ற ஆசிரியர் மாரியப்பன், முத்தாலங்குறிச்சி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.