கால்வாய் கிராமத்தில் சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா நடந்தது.
இதை யொட்டி முதல் நாள் மாலை 6 மணிக்கு கும்பாபிசேகம் குடியழப்புடன் துவங்கியது. மறு நாள் காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்து செல்லப்பட்டது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை மதியக்கொடை நடந்தது. மதியம் 1 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இரவு 9மணிக்கு அலங்கார தீபாராதனை இரவு 12 மணிக்கு சாமக்கொடை தொடர்ந்து வேட்டைக்கு செல்லுதல் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை சண்முகவேல் சித்திரை முத்து லெட்சுமணன் தலைமையில் கோவில் கமிட்டியார் செய்திருந்தனர்.


