தமிழகமெங்கும் தடுப்பணை கட்ட 1000 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்த எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று எடப்பாடி பழனி சாமி பேசினார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் மாநில தலைவர் தமிழசை சௌந்திரராஜன் அவர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்துங்கநல்லூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது
தமிழகமெங்கும் மக்கள் முன்னேற்றத்துக்கு தேவையான திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். விவசாய மக்கள் நலம் பெறும் வகையில் ஏரி குளங்கள் தூர் வாரப்படுகிறது. மழை நீரை சேகரித்து வைப்பதற்கு தமிழகம் முழுவதும் தடுப்பணை கட்ட 1000 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்துள்ளோம். அனைத்து பகுதியிலும் சிறப்பாக சாலை வசதி செய்து வருகிறோம். பள்ளிமாணவ மாணவிகள் பலன் பெறும் வகையில் பல்வேறு சைக்கிள் உள்பட நலத்திட்டங்களை செய்து வருகிறோம். இதனால் இந்தியாவில் கல்வி கற்போரின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் உயர்ந்து உள்ளது. புரட்சி தலைவி அம்மா இருக்கும் போது என்னென்ன திட்டங்கள் திட்டமிட்டார்களோ அவை அனைத்தும் தற்போது நிறைவேற்றி வருகிறோம். மத்தியில் நிலையான மோடி தலைமையிலான ஆட்சி அமைய வெற்றி வேட்பாளர் தமிழிசை சௌந்திரராஜனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன் என்றுஅவர்பேசினார்.
அவருடன் வேட்பாளர் தமிழிசை சௌந்திரராஜன், அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன், திருப்பாற்கடல், அதிமுக ஒன்றிய செயலாளர் செங்கான் , பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன் உள்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.
செய்துங்கநல்லூர் தூத்துக்குடி தொகுதியை சேர்ந்த ஊர். இங்கு தாமரை சின்னத்தில் பி.ஜே.பி மாநில தலைவர் தமிழசை சௌந்திரராஜன் போட்டியிடுகிறார். ஆனால் அ.தி.மு.க சார்பில் தான் கொடி கட்டப்பட்டு வரவேற்பு கொடுக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி கொடி அதிகமாக இல்லாததை கண்ட முதல்வர், தாமரை சின்னம் என்பதை அழுத்தி அழுத்தி கூறியபடி பிரச்சாரம் செய்தார். வேட்பாளர் தமிழிசை சௌந்திரராஜன் மட்டும் சின்னத்தின் கையில் வைத்து காட்டியபடியே நின்றார்.
முதல்வரிடம் செய்துங்கநல்லூர் தொழில் வர்த்த க சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.


