கருங்குளம் பகுதியில் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்து திமுக வேட்டபாளர் கனி மொழி வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி, தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர். இவர் நேற்று முன்தினம் இரவு கருங்குளம் ஒன்றியம் வல்லகுளம் பஞ்சாயத்து மணல்விளை வந்தார். அங்கு கருங்குளம் ஒன்றிய திமுக செயலாளர் நல்லமுத்து, பொதுக்குழு உறுப்பினர் கணேசன் ,பொருளாளர் கோபால் உள்பட கூட்டணி கட்சியினர் வரவேற்றனர். பின் அவர் மணல்விளை , புதுக்குளம், அரசர்குளம் ஆகிய இடங்களில் பேசினார்.
அரசர்குளத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அவர் பேசியதாவது
தாமிபரணி ஆற்றில் கிடப்பில் கிடக்கும் வெள்ள நீர் கால்வாய் திட்டத்தினை திமுக கொண்டு வந்தது. அந்த திட்டம் செயல்பட்டால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் வற்றாமல் காப்பாற்றபடுவதுடன் , விளைச்சல் பெறுகும். அந்த திட்ட பணி பணி நடந்து விட்டது. தற்போது அதிமுக ஆட்சி காலத்தில் அத்திட்டத்தினை கிடப்பில் போட்டு விட்டனர். என நாள் பல கோடி ரூபாய் வீணாகி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த திட்டம் நிறைவேற்றப்படும். இப்பகுதி மக்கள் விவசாய பிரச்சனை அதன் மூலம் தீர்க்கப்படும். கல்வி கடன், மற்றும் விவசாய கடன்தள்ளுபடி செய்யப்படும் என அவர் பேசினார். அரசர்குளத்தில் கனிமொழி எம்.பி வருவதை எதிர்பார்த்து அதிகமான கூட்டம் சேர்ந்து இருந்தது. அவர் வேனில் வரும்போது பெண்கள் இருபுறமும் கூடி நின்றனர். அவர்களின் அன்பின் வெளிபாடாக கனிமொழிக்கு ஆதரவு அளித்து கோஷம் எழுப்பினர். அந்த கூட்டத்தில் நீந்தி ஊரை விட்டு வெளியே வந்தார். அதன் பின் இரவு 10 மணி ஆன காரணத்தில் தெற்கு காரசேரி, தாதன்குளம், கருங்குளம் , செய்துங்கநல்லூர் ஆகிய இடங்களில் மக்களிடையே தேர்தல் விதிக்கு இணங்க பேசவில்லை. ஆனாலும் கூட்டம் கலையாமல் கனிமொழியை எதிர்பார்த்து காத்து நின்றார்கள்.
செய்துங்கநல்லூரில் கூட்டணி கட்சிகள் உள்பட 1000 தொண்டர்கள் கனிமொழி யை எதிர்பார்த்து நின்றனர். அவர் வந்த வுடன் அவரிடம் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். காவல் நிலையத்தில் இருந்து கரூர் வைஸ்யா வங்கி வரை இருப்புறமும் தொண்டர்கள் நின்றனர். அவர்களிடம் வாக்கு சேகரித்த கனிமொழி, வெற்றிபெற்று மீண்டும் இவ்விடத்தில் வந்து பேசுவேன் என வாக்குறுதி கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்.
அவருடன் மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், உமரிசங்கர் உள்பட பலர் வந்தனர்.