
தூத்துக்குடி பிரச்சனை தெரியாத தமிழசை சௌந்தரராஜனுக்காக உங்கள் ஓட்டு என வாகை சந்திர சேகரன் வசவப்பபுரத்தில் பேசினார்.
கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள வசவப்பபுரம், வல்லநாடு ஆகிய பகுதிகளில் தூத்துக்குடி தி.மு.க பாராளுமன்ற வேட்பாளர் கனிமொழியை ஆதாரித்து வேளச்சேரி எம்.எல்.ஏ வாகை சந்திரசேகரன் வாக்கு சேகரித்தார். அவர் வசவப்பபுரத்தில் பேசியதாவது.
மோடி ஆட்சியில் தமிழகத்துக்காக எந்த காரியமும் இதுவரை செய்யவில்லை. இனிமேலும்செய்யப்போவதில்லை. எடப்பாடி அரசு தனது முதலமைச்சர் பதவியை காப்பாற்ற மோடி அரசுக்கு கப்பம் கட்டி வருகிறது. தொடர்ந்து 2 வருடம் மீண்டும் மோடி அரசின் உதவியுடன் தொடர்ந்துஆட்சி நடந்த முயற்சிக்கிறது. அதற்காக எதைசெய்யவும் துணிந்து நிற்கிறது . அதிமுக ஆட்சியில்முதலமைச்சரே சரியில்லை. குறிப்பாக அவர் கம்பாராமயணத்தை எழுதியவர் யார் என்றால் சேக்கிழார் என்கிறார். சாதரண ஒரு சிறுவனுக்கு தெரியும் விசயம் கூட முதலமைச்சருக்கு தெரியவில்லை. திண்டுகல் சீனிவாசன் என்ற அமைச்சர் பா.ம.காவுக்கு மாம்பழ சின்னத்தில் வாக்களியுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக ஆப்பிள் சின்னம் என வாய் உளருகிறார். இவர்களை வைத்து சிறப்பான ஆட்சி எப்படி தர முடியும். கடந்த 8 ஆண்டு காலமாக எந்த ஒரு திட்டமும் தமிழ் நாட்டில் நடைபெறவில்லை. கனிமொழியை பொறுத்தவரை தூத்துக்குடி உடன் அடிக்கடி தொடர்ப்பு கொண்டவர்.ஆனால் தமிழிசை சௌந்தரராஜனுக்கு தூத்துக்குடியில் உள்ள எந்த பிரச்சனையும் தெரியாது. மேலும் இன்றைக்கு 18 எம்.எல்.ஏ 40 எம்.பி தொகுதிக்கு தேர்தல்நடக்கிறது. நீங்கள் கனிமொழிக்கு வாக்களிப்பதின் மூலமாக மோடி அரசை நீக்கி விட்டு தளபதி கூறியபடி ராகுலை பிரதமர் ஆக்கலாம். மேலும் 18 எம்.எல்.ஏ தொகுதியில் திமுகவிற்கு வெற்றி தந்து, எடப்பாடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பலாம் என அவர்பேசினார்.
இந்த பிரச்சாரத்தில் கருங்குளம் ஒன்றிய வடக்கு செயலாளர் மகராஜன், காங்கிரஸ் அய்யாக்குட்டி, திமுக முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.