செய்துங்கநல்லூரில் கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்க ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் முத்து தலைமை வகித்தார். செயலாளர் கருப்பசாமி , சுந்தரவள்ளி முன்னிலை வகித்தனர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் துரைப்பாண்டியன், சத்துணவு ஊழியர் சங்க வட்ட தலைவர் ஸ்ரீனிவாசன், செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் பேசினர். அகவிலைபடியுடன் கூடிய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், மற்றும் பொங்கல் கருணை தொகை உடனடியாக வழங்கிட வேண்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. அடைக்கலம் நன்றி கூறினார்.


