தெற்குகாரசேரியில் சமுதாய கிணற்றில் வளர்ந்து நிற்கும் மரத்தில் வாழும் பாம்புகளால் பொதுமக்கள் அவதி. மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருங்குளம் ஒன்றியம், தெற்கு காரசேரி பஞ்சாயத்து மிகவும் பழமையான பஞ்சாயத்தாகும். இந்த பஞ்சாயத்தில் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு பஞ்சாயத்து சார்பில் கிணறு தோண்டப்பட்டது. மிகவும் பிரமாதமாக தோண்டப்பட்ட இந்த கிணறு தெற்கு காரசேரி மட்டுமல்லாமல் சுற்று பகுதியில் உள்ள பல ஊர்களுக்கு குடிதண்ணீர் தரும் அற்புதமான இடமாக இருந்தது. இதற்கிடையில் கருங்குளம் & மூலைக்கரைப்பட்டி கூட்டு குடிதண்ணீர் திட்டம் மூலமாக இவ்வூருக்கு கருங்குளம் ஆற்றில் இருந்து குடிதண்ணீர் வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின் இந்த கிணற்றில் குடிதண்ணீர் எடுப்பதை விட்டு விட்டனர். ஆனாலும் குளிப்பது, தங்கள் உடைகளை துவைப்பது, ஈமகிரிகை செய்வதற்கு இந்த கிணற்றை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கிணற்றில் மோட்டர் ரூம் வெளிபுறம் கிணற்றின் பக்கம் மரம் ஒன்று வளர்ந்தது. இந்தமரம் வளர்ந்து பெரிதாகி மோட்டார் ரூம்புக்கு சென்று சுவரில் விரிசலை ஏற்படுத்தியது. அதன் பின் இந்த மரத்தினால் மோட்டார் அறை உடைந்து விழுந்துவிட்டது. இதனால் உள்ளிருந்து மோட்டாரை மற்றொரு இடத்தினை வைத்து பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.
இதுகுறித்து இவ்வூரை சேர்ந்த தர்மராஜ் என்பவர் கூறும் போது, எங்கள் ஊர் கிணறு சுமார் 40 வருடங்களுக்கு முன்பு தோண்டப்பட்டது. ஊருக்கு மேல் புறம் உள்ள இந்த கிணற்றில் குடிதண்ணீருக்காக மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஒரு காலத்தில் ஆற்று தண்ணீர் வழங்கப்பட்ட காரணத்தினால் இந்ததண்ணீரை மக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்த கிணற்றில் மோட்டார் அறை உடைந்து விட்டது. இதில் வளர்ந்த மரம் அறைக்குள் வந்து மோட்டாரை தாக்கி விட்டது. எனவே மோட்டாரை மாற்று இடத்துக்கு மாற்றி வைத்து விட்டனர். ஆனாலும் இந்த அறை உடைந்து மிக மோசமாக உள்ளது. தற்போது இங்கு பாம்புகள் குடியிருந்து வருகிறது. எனவே உடனடியாக இந்த மரங்களை அகற்றி புதிய மோட்டார் அறைகட்டி. இந்த சமுதாய கிணற்றை பராமரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மக்கள் பிரச்சனை தீர்க்க உடனடியாக மரத்தினை வெட்டி, அறையை கட்டி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய கிணறு வெட்டுவது கடினம்.
தெற்கு காரசேரி சமுதாய கிணறு கருங்குளம் ஒன்றியத்தில் 40 வருடங்களுக்கு முன்பு சேர்மனாக இப்ராகீம் என்பவர் இருந்த போது வெட்டப்பட்டது. அந்த காலத்தில் குடிதண்ணீர் தட்டுபாடு இப்பகுதியில் அதிகமாக இருந்தது. எனவே இந்த கிணற்றில் உள்ள குடிதண்ணீரை இந்த பகுதியில் உள்ள மக்கள் பயன்படுத்தி வந்தனர். அதோடு அரசு இலவச மின்சாரத்தினை இந்த இடத்துக்கு கொடுத்திருந்தனர். எனவே மோட்டார் மூலம் இறைக்கப்படும் தண்ணீரை பிற்காலத்தில் விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது தெற்கு காரசேரி பஞ்சாயத்து நிர்வாகம் இந்த கிணற்றை கண்டுகொள்ளாமல் இருப்பது விசித்திரமாக உள்ளது.
படம் & கிணற்றில் உள்ள மோட்டார் அறையில் உள்ள மரம்.


