செய்துங்கநல்லூர் அருகே கருங்குளத்தில் நடந்து சென்றவர் மீது லோடு வேன் மோதி விவசாயி பலி.
செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆழ்வார். இவரது மகன் மாடசாமி 45. மாரியப்பன் மனைவி ராசாத்தி (34). ஆகிய இருவரும் கருங்குளம் பகுதியில் வெள்ளரிக்காய் விற்பனை செய்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல வெள்ளரிக்காய் வாங்குவதற்காக இருவரும் கருங்குளம் சுடலை கோவில் வழியாக திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற கேபிள் வயர்களை ஏற்றிக்கொண்டு வந்த லோடு வேன் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில் மாடசாமி கால் துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராசாத்தி படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ராசாத்தியை 108 ல் ஏற்றி சிகிச்சைககாக அனுப்பி வைத்தனர். மாடசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாடசாமிக்கு லெட்சுமி என்ற மனைவியும் மணிகண்டன், மகராசி என்ற குழந்தைகளும் உள்ளனர். இதுகுறித்து செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய வேன் டிரைவர் திருச்சி அருகே உள்ள மணச்சநல்லூரை சேர்ந்த யுவராஜை தேடி வருகிறார்


