ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அத்தியாவசியப் பொருள்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடைகளில் விலைப் பட்டியலை ஒட்ட வேண்டும் எனவும் வட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் காய்கனி மற்றும் பலசரக்கு கடைகளில் விற்கப்படும் பொருள்களின் விலைகள் அதிக வித்தியாசம் உள்ளதாகவும், ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு இருந்த விலையைவிட தற்போது பலமடங்கு அதிகரித்து விற்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இந்நிலையில், மளிகை மற்றும் காய்கனிக் கடைகளில் விற்கப்படும் பொருள்களின் விலைப்பட்டியல் கடையில் ஒட்டப்பட வேண்டும். அவ்வாறு விலைப்பட்டியல் இல்லாமல் அதிக விலைக்கு பொருள்களை விற்கும் கடைகள் கண்டறியப்பட்டால் அந்த கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும் என வட்டாட்சியா் சந்திரன் தெரிவித்துள்ளாா்.


