கொரோனா தொற்றுக்கு செய்துங்கநல்லூர் குருவானவர் பலி.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயரின் தம்பியும், செய்துங்கநல்லூர் சி.எஸ்.ஐ ஆலயத்தின் குருவானவர் ஜேசுபாதம்(60). இவர் கடந்த வாரம் உடல்நலக்குறைவால் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தொடர்ந்து 5 நாட்களாக சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது உடல் அவரது சொந்த ஊரான ஏரல் அருகே உள்ள பண்ணைவிளையில் அடக்கம் செய்யப்பட்டது.


