ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் குரு மகாலில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி இன்றைய தினம் போடப்பட்டது.
கருங்குளம் அரசு மருத்துவமனை சார்பில் நடந்த இந்த முகாமில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 167 பேர் இந்த முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த முகாமிற்கு பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் ராமேஷ், கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன் உள்பட பலர் பார்வையிட்டனர்.
கிராம நிர்வாக அதிகாரி சக்தி விக்னேஷ்வரன் உள்பட பலர் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.


