
தூத்துக்குடி மாவட்டம், லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த ரத்தினம் மகன் மனோஜ். இவரது உறவினர்கள் சேகர் மனைவி வயலின், மனோஜ் மனைவி நேசபாலா உள்பட 4 பேர் திருநெல்வேலி மருத்துவமனைக்கு சென்று விட்டு இன்று அதிகாலை சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
காலை 5 மணி அளவில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடிரென்று டிரைவர் தூங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் ஓட்டி வந்த கார் சாலையில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் இருந்த 4 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செய்துங்கநல்லூர் போலிசார் படுகாயமடைந்தவர்களை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.