கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு இரண்டு வாரத்திற்கு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
இதில் மளிகை கடை, காய்கறி கடை மற்றும் பலசரக்கு கடைகள் மட்டுமே மதியம் 12 மணி வரை திறந்திருக்க அரசு உத்தரவிட்டுள்ளது. வாரச்சந்தைகள் மற்றும் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் புதன்கிழமை நடைபெறும் வாரச்சந்தையானது திறக்கப்பட்டது. இதற்காக வியாபாரிகள் காலை முதலே திருநெல்வேலி & திருச்செந்தூர் சாலையில் தற்காலிக கடைகள் அமைத்து பொருட்களை வியாபாரம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மூலம் பொதுமக்கள் தகவல் அறிந்து வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க குவிந்தனர். பொருட்கள் வாங்க வந்தவர்களில் ஏராளமானோர் சமூக இடைவெளிகளை மறந்து முககவசம் பொருட்கள் வாங்கிச் சென்றனர். வியாபாரிகள் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி பொருட்களை விற்பனை செய்தனர். இதனால் கொரானா தொற்று பரவும் அபயம் ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் பக்கத்து கிராமத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் குவிய ஆரம்பித்தனர். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்த தகவல் கிடைத்த வுடன் செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் சுஜீத் ஆனந்து, சப் இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் மற்றும் போலிசார், சம்பவ இடத்துக்கு வந்து சந்தை முன் கேட்டை அடைக்க நடவடிக்கை எடுத்தார். சமூக இடைவெளி மறந்து நின்ற மக்களையும் வியாபாரிகளையும் திருப்பி செல்லும் படி அறிவிருத்தினார். ஆனால் அவர்கள் அத்தியவாசிய பொருள்கள் வாங்கத்தானே நிற்கிறோம் என்று வாதடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்து அவர் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வியாபாரிகளை காலி செய்யும் படி போனில் தகவல் கூறினார். கிராம நிர்வாக அதிகாரி செய்துங்கநல்லூர் சக்தி விக்னேஷ்வரன், சேரகுளம் ஆனந்த் ஏகாந்த மூர்த்தி, முத்தாலங்குறிச்சி கந்தசுப்பு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து வியாபாரிகளை கலைந்து செல்ல அறிவுருத்தினர், வருவாய் ஆய்வாளர் இருதய மேரி முககவசம் அணிந்து வராதவர்கள் மீது அபதார தொகை விதித்து நடவடிக்கை எடுத்தார். ஆனாலும் கடடுக்கடங்காத கூட்டம் சந்தையை நோக்கி வந்தது. தொடர்ந்து சந்தை ஒப்பந்த காரர்களுக்கு அபதாரம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின் வியாபாரிகள் ஒருவர் பின் ஒருவராக கலைந்து சென்றனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் கூறும் போது, பலசரக்கு காய்கறி, மீன் வியாபாரிகளுக்கு காலை 12 மணிவரை ஊரடங்கு தளர்வு என்பதை காரணம் காட்சி வியாபாரிகள் செய்துங்கநல்லூர் சந்தையில் குவிந்து விட்டனர். எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவத்தின் மீது நடவடிக்கை எடுத்து, சந்தை ஒப்பந்த காரர்களுக்கு அபாதாரம் விதிக்கப்பட்டுள்ளது.
வரும் புதன்கிழமை ஊரடங்கு காலமாக இருப்பதால் சந்தை நிச்சயம் கிடையாது எனவே பொதுமக்கள் சந்தைக்கு வரவேண்டாம் என அவர் அறிவிருத்தினார். அதன் பின் 12 மணிக்குள் அனைத்து கடைகளும் செய்துங்கநல்லூரில் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த இரண்டு நாள் ஊரடங்கு மூலம் செய்துங்கநல்லூர் கட்டுப்பாடாக இருந்தது. தற்போது தீடீரென்று சந்தையில் 100க்கணக்கானோர் கூடியது. சமூக இளைவெளியை காற்றில் பறக்கவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை வியாபாரிகளும், பொதுமக்களும் கண்டு கொள்ள வில்லை என்பது வருத்தம் அளிப்பதாக இருந்தது.


