செய்துங்கநல்லூர் காவல் நிலையம் முன்பு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் தலைமை வகித்தார்.பாசப்பறவைகள் சமூகசேகவர் ராஜ்பாண்டியன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வழக்கறிஞர் தில்லை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜீத் ஆனந்த கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் சப்இன்ஸ்பெக்டர்கள் தீலிப் அந்தோணி, ரவிக்குமார், கருத்தையா, சமூக சேவகர் சுடலைமுத்து, பஞ்சாயத்து எழுத்தர் சங்கரபாண்டியன், கார்த்திக் வள்ளி நாயகம், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து செய்திருந்தனர்.
இந்த குழுவினர் தினமும் கபசுரகுடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளனர்.


