.
ஆறாம்பண்ணையில் வளைகூடா நாடு ஆறாம்பண்ணை வாழ்மக்கள் சங்கம் சார்பில் வீடு வீடாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
ஆறாம்பண்ணை கிராமத்தில் கொரோனா தொற்று நோய் தடுக்கும் முகாமாக பஞ்சாயத்து சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆறாம்பண்ணை கிராமத்தில் இருந்து வளைகூடா நாடுகளில் வாழும் மக்கள் சார்பில் கபசுர குடிநீர் வழங்க மூன்று கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் படி ஆறாம்பண்ணை, முஸ்லீம் தெரு, அரபாத் நகர், ஆறாம்பண்ணை ஆர்.சி. கோயில்தெரு, ஆதிதிராவிடர் தெரு உள்பட அனைத்து தெரு மக்களுக்கும் வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கினர்.
இதன் துவக்க நிகழ்ச்சி ஆறாம்பண்ணை பள்ளி வாசலில் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் தலைமை வகித்தார். பள்ளிவாசல் செயலாளர் முகம்மது மொன்னா முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதன் பின் வீடு வீடாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆறாம்பண்ணை வெளிநாடு வாழும் மக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
&&&&&


