உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஜீன் 30 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கொரோனா தொற்று என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில் செய்துங்கநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள சில ஊர்களில் கொரோனா பாதிப்பு டெய்லர், ஏஜென்சி, மீன் வியாபாரி என்று பரலாக பரவ ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாக நேற்று முன்தினம் செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் வைத்து ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சந்திரன் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் செய்துங்கநல்லூரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதனை முன்னிட்டு இன்று செய்துங்கநல்லூரில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.


