ஆறாம்பண்ணை ஊராட்சி பொது மக்களுக்கு முறப்பநாடு போலீசார் மூலம் பொதுமக்கள் நலன் கருதி சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதனை பஞ்சாயத்து தலைவர் பள்ளிவாசல் செயலாளர் விஏஓ ஊர் பொதுமக்கள் கூட்டம் போட்டு நடைமுறைப்படுத்தினர்.
ஆறாம்பண்ணை ஊராட்சியில் கொராணா இல்லாத கிராமமாக நீடிக்க ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர், ஊர் பொதுமக்கள் , பள்ளிவாசல் செயலாளர், விஏஓ, இணைந்து சில கட்டுப்பாடுகளை எங்கள் கிராமத்துக்கு தேவை என்று முறப்பநாடு போலீசாரிடம் ஆலோசனை கேட்டனர், முறப்பநாடு போலீசார் இது ஒரு நல்ல கட்டுப்பாடு தான் இதை செயல்படுத்தலாம். என்று அவர்கள் அறிவுறுத்தலின் பெயரில் பஞ்சாயத்து முன்பு கூட்டம் போட்டு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தினர்.
என்னென்ன கட்டுப்பாடுகள் ,அனைத்து வியாபாரிகள் ஆறாம்பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் செல்ல அனுமதி இல்லை,
வெளிநபர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் நபர்கள் ஊராட்சிக்குட்பட்ட தெருக்களில் செல்ல அனுமதி இல்லை,
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆறாம்பண்ணை ஊராட்சி கொரோனா இல்லாத பகுதியாக நீடிக்க ஊர் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளி கடைபிடித்தல், மாஸ்க் அணிதல் போன்ற அரசின் அறிவுறுத்தல்களை கடைபிடித்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்,
நமது ஊர்மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியூர்களுக்கு செல்லும்போது தமிழகஅரசின் அறிவுறுத்தலின் படி மாஸ்க் உபயோகித்தல், மற்றும் சமூக இடைவெளி , கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்,
வெளியூரிலிருந்து வரும் வியாபாரிகள் திடலில் வைத்து மட்டுமே குறிப்பிட்ட நேரங்களில் வியாபாரம் செய்ய வேண்டும் காலை 7 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் ஆறு முப்பது மணி வரை வியாபாரிகள் கண்டிப்பாக கையுறைகள் முகக் கவசங்கள் அணிந்திருக்க வேண்டும். பொதுமக்கள் திடலுக்கு பொருட்கள் வாங்க வரும் பொழுது அரசாங்க அறிவுறுத்தலின்படி சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், இந்தத் தடையை கோரோனா காலத்தில் கவனமாக கடைபிடித்து வரவேண்டும், மீறினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும், என்று இக்கூட்டத்தில் பொதுமக்கள் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர், கொராணா வைரஸ் இல்லாத கிராமமாக நமது கிராமத்தை வைத்துக்கொள்ள ஒத்துழைப்போம் என்று பொதுமக்கள் உறுதியளித்தனர்.
இந்நிகழ்வில் பள்ளிவாசல் செயலாளர் முன்னாமுகமது, மக்கள் நலச் சங்கத் தலைவர் சையது, பஞ்சாயத்து தலைவர் ஷேக் அப்துல் காதர், துணைத் தலைவர் அப்துல் கனி, வார்டு உறுப்பினர் இப்ராகிம், விஏஓ கமல்ராஜ், கிராம காவலர் சரத்குமார், வியாபாரிகள் அப்துல் ரசாக், அப்துல் காதர், மற்றும் ஊர் பொதுமக்கள், கலந்து கொண்டனர்.