தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேருந்து நிலையம் அருகே உள்ள செட்கோ கலையரங்கத்தில் நாட்டு மூலிகைகள் மற்றும் மூலிகை மருந்து பயிற்சி வகுப்புகள் நடந்தது.
இந்த கண்காட்சியில் கருந்துளசி, வெண்துளசி, கோபுரம் தாங்கி, கொட்டக்கரந்தை, நத்தை சூரி, நாயுருவி, ஆவாரம்பூ, நிலவேம்பு, கற்றாழை, சதுரகள்ளி, குமட்டி, சொடக்கு தக்காளி உள்பட 500க்கும் மேற்பட்ட நாட்டு மருந்து மூலிகைச் செடிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தனர். இதற்கான பயிற்சி வகுப்பை சித்தமருத்துவர் மதுரம் செல்வராஜ் நடத்தினர்.
அழிந்து வரும் நாட்டு மருந்துகளை அனைவரும் காப்பாற்ற வேண்டும் என்று அவர் கண்காட்சியை பார்வையிட வந்தவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.