முறப்பநாடு அருகே நாணல்காடு தாமிரபரணி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் உடலை போலிசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று காலை நாணல்காடு அருகே தாமிரபரணிஆற்றில் 50 வயது மதிக்கத்தக்கவரின் உடல் கிடந்தது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் முறப்பநாடு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பாளை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். மாநிறம் ஐந்தரையடி உயரம், ஊதாகலர் சீன்ஸ்பேட், ரோஸ் கலரில் முழுக்கை சட்டை போட்டு இருந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்தால் முறப்பநாடு போலிஸ் நிலையத்தினை தொடர்ப்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.