கருங்குளத்தில் பைக் நேருக்கு நேர் மோதியதில் கட்டிட கான்டிரக்டர் பலியானார்.
கொங்கராயகுறிச்சி கீழத்தெரு சிவலிங்கம் மகன் பார்த்தீபன்(33). இவர் கட்டிட கான்டிரக்டர். அரசர்குளம், தாதன்குளம் உள்பட பல பகுதியில் வீடு கட்டி கொடுத்து வருகிறார். இன்று காலை 9 மணிக்கு கருங்குளம் சத்திரத்தில் இருந்து வேலைக்கு ஆள்களை அனுப்பி விட்டு கொங்கராயகுறிச்சி செல்ல ரோட்டை பைக்கில் கடந்துள்ளார்.
அப்போது தென்திருப்பேரையில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்த பைக் இவர் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பார்த்தீபன் பலத்த காயம் அடைந்தார். இதில் இவர் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. சிகிச்சைகாக பாளை மேட்டுதிடல் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். பார்த்தீபனுக்கு சந்தனமாரி (30) என்ற மனைவியும் ஆகாஷ்(10), பிரியா(8), பிருந்தா(6), ஆரிப்(4) ஆகிய குழந்தைகள் உள்ளன. இவரது சகோதரி குழந்தைகளையும் இவர்தான் வளர்த்து வந்தாராம். இவர் இறந்த செய்தி கேட்டவுடன் மனைவி உள்பட உறவினர் கதறி அழுதது மிக பரிதாபமாக இருந்தது.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்கு பதிவு செய்து மோட்டார் பைக்கை ஓட்டி வந்த தென்திருப்பேரையை சேர்ந்த செல்லப்பா மகன் கணேசன்(25) என்பரை கைது செய்தனர்.


