சாத்தான்குளம் அருகே இரு தரப்பினரிடையே தொடர் மோதல்.புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல் ஆய்வாளர்.உயிருக்கு பாதுகாப்பு கோரி ஒரு தரப்பு மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு கொடுத்து உள்ளிருப்பு போராட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அருகே உள்ள பேய்க்குளம் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக இரு தரப்பு இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளரிடம் பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தரப்பு இளைஞர்களை 7 பேர் கொண்ட மற்றொரு தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இன்று பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு தங்கள் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சிமன்ற தலைவரிடம் மனு அளித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


