செய்துங்கநல்லூரில் காற்று மாசுபடுவதை தடுக்க விழிப்புணர்வு பேரணி நடந்தது.
செய்துங்கநல்லூர் புனித லூசியா ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் காற்று மாசுபடுவதை தடுக்க விழிப்புணர்வு பேரணி நடந்தது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார். பங்குதந்தை ஆரோக்கிய லாசர் அடிகளார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் இசக்கியம்மாள் முன்னிலை வகித்தார்.
செய்துங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதிநாதன் பேரணியை துவக்கி வைத்தார். பஞ்சாயத்து எழுத்தர் சங்கரபாண்டியன் வரவேற்றார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இந்த பேரணியில் காற்று மாசுபடுவதை தடுக்க கோஷம் எழுப்பபட்டது. இந்த நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் பட்டுராஜன், ராஜ், முருகன், சுப்பையா பாண்டியன், பொன்னையா உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை ரமணிபாய் நன்றி கூறினார்.


