செய்துங்கநல்லூரில் பொங்கல் விளையாட்டு போட்டி நடந்தது. இதில் செய்துங்கநல்லூர் மேலத்தெருவில் இருந்து கீழத்தெரு வரை போடப்பட்டிருந்த பிரமாண்டமான கோல போட்டி பொதுமக்கள் மனதை கவருவதாக இருந்தது.
இந்த போட்டிக்கு -ஊர் பெரியவர் ராமசாமி தலைமை வகித்தார். ஆறுமுகம், எம்.பி. முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கினார். இதில் முதல் பத்து பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாண்டியன் கிராம வங்கி நகை மதீப்பீட்டாளர் கணேசன், வீரபுத்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். சுடலை முத்து நன்றி கூறினார். செய்துங்கநல்லூர் ஆசை வெண்ணிலா இளைஞர் அணியினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


