
கால்வாய் கிராமத்தில் சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா வருகிற 29 ந்தேதி நடைபெறுகிறது.
இதை யொட்டி வருகிற 29 ந்தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு கும்பாபிசேகம் குடியழப்புடன் துவங்குகிறது. 30 ந்தேதி காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்து செலுத்துதல் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை மதியக்கொடை நடைபெறுகிறது. மதியம் 1 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. இரவு 9மணிக்கு அலங்கார தீபாராதனை இரவு 12 மணிக்கு சாமக்கொடை தொடர்ந்து வேட்டைக்கு செல்லுதல் நடைபெறும் . இதற்கான ஏற்பாடுகளை சண்முகவேல் சித்திரை முத்து லெட்சுமணன் தலைமையில் கோவில் கமிட்டியார் செய்து வருகிறார்கள்.