செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர நிறைவு விழாநடந்தது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு முத்தாலங்குறிச்சி ஸ்ரீகுணவதியம்மனுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. அதன் பின் கும்பம் எடுத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர நிறைவு விழா நடந்தது. இதையொட்டி 21 வகையான அபிசேகங்கள் தாமிரபரணி நதிக்கு நடந்தது. பின் தீர்த்த அபிசேகம் நடந்தது. தொடர்ந்து தாமிரபரணி நதிக்கு தீப வழிபாடு நடந்தது. பின்னர் பெண்கள் மலர் தூவி நதிக்கு நன்றி செலுத்தினர். அபிசேக பூஜைகளை சுந்தரகம்பர் நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் இருவப்பபுரம் பெரும்படை சாஸ்தா திருப்பணி கமிட்டி தலைவர் பெருமாள், கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வள்ளிநாயகம், முத்துபாண்டி, ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.