
தூத்துக்குடி விக்டோரியா தெருவைச் சேர்ந்தவர் ராஜ் மகன் ரோலன் (56), இவர் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்தில் அதிகாரியாக உள்ளார். இவரிடம் கீழ வல்லநாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான சுந்தர் என்பவர் கோழி மற்றும் ஆட்டுப் பண்ணை அமைப்பதற்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தாராம். ஆனால், ரூ.5ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்குமுடியும் என அதிகாரி ரோலன் கூறினாராம். இதையடுத்து சுந்தர் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பத்துறை அலுவலகத்தில் செய்தார். புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். இதையடுத்து டிஎஸ்பி ஹெக்டர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையம் அங்கு சென்று, சுந்தரிடம் ரசாயனம் தடவிய ரூ.5ஆயிரம் பணத்தை கொடுத்து தீயணப்பு அதிகாரியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். ரோலன் லஞ்ச பணத்தை பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.