இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அந்த அமைப்பு அனுப்பியுள்ள மனு : முறப்பநாடு காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் வேல்ராஜ் உணவு கடத்தல் பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டார். முறப்பநாடு காவல் நிலைத்தில் அவர் பணியில் இருக்கும் பொழுது இளைஞர்களுக்கு நன்கு ஊக்கம் கொடுத்து அருகில் உள்ள பல கிராமங்களில் பொது நூலகம் மற்றும் 5க்கும் மேற்பட்ட வாலிபால் விளையாட்டு மைதானம் திறந்து வைத்து இளைஞர்களுக்கு நல்வழிப்படுத்தி வந்தார்.
பொதுமக்கள் மத்தியில் நல்ல செல்வாக்குடன் பணியாற்றி வந்தார். அவர் பணி மாற்றத்தினால் கள்ள மார்க்கெட்டில் இருந்து அதிகாலை முதல் மதுபானம் கஞ்சா மற்றும் திருட்டு உள்ளிட்ட சமூக விரோதச் செயல் முறப்பநாடு சரகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தாராளமாக நடைபெற்று வருகிறது. மேலும் போக்குவரத்து விதிகள் மீறல் நான்கு வழி சாலை புறக்காவல் நிலையங்களிலும் மற்றும் வல்லநாடு பக்கப்பட்டி முறப்பநாடு வசவப்புரம் பகுதியில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா செயல்படவில்லை, மற்றும் உயர்மின் விளக்கு அனைத்தும் பழுதடைந்துள்ளது.
உதவி ஆய்வாளர் வேல்ராஜ் பணியில் இருந்திருந்தால் பக்கபட்டில் நடைபெற்ற இந்த சமூக விரோதச் செயல் நடைபெற விடமாட்டார். எனவே பணி மாற்றம் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் வேல்ராஜ்-ஐ மீண்டும் முறப்பநாடு காவல் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்தால் மிகவும் நன்மையாக இருக்கும். பொதுமக்களின் இந்த கோரிக்கையை உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சிய சந்தீப் நந்தூரி, மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோருக்கு பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.