
கருங்குளம் கள்ளவாண்ட சுவாமி கோயில் கொடை விழா நடந்தது.
இதையொட்டி மாலை குடியழப்பு நடந்தது. தொடர்ந்து கள்ளவாண்ட சுவாமி கோயிலுக்கு தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. அதன் பின் கோயிலுக்கு அலங்காரம் நடந்தது. அதன்பின் வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
அதை தொடர்ந்து வேட்டைபானை போடுதல் நிகழ்ச்சி மற்றும் சாமக்கொடை நடந்தது. மறு நாள் காலை படப்பு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கருங்குளம் காமராஜர் தெரு கொடை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.