தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் பகுதியில் மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக தட்டார்மடம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் தலைமையில் போலீசார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தினர். அப்போது இடைச்சிவிளை அழகியவிளையில் பதுக்கி வைக்கப்பட்ட 532 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுவை பதுக்கி வைத்திருந்ததாக இடைச்சிவிளையைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் ரவிக்குமார் (21), அவரது சகோதரர் சார்வின் (34), எம்மாகிழவிவிளையைச் சேர்ந்த வேலாண்டி மகன் வேல்முருகன் (21) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


