தாமிரபரணி அணைக்கட்டில் மிக நீளமான தடுப்பணையானது மருதூர் அணை, இந்த அணை மிகவும் அழகான இடமாகும். இந்த அணையில் காணும் பொங்கலை முன்னிட்டு ஏரானமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர்.
அவர்கள் குளித்து, அணைக்கட்டில் அமர்ந்து குழுவாக அமர்ந்து சாப்பிட்டனர். இதை முன்னிட்டு தூத்துக்குடி நெல்லை உள்பட பல இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு கூடினர். இதுகுறித்து தூத்துக்குடி சேர்ந்த கவிதா என்பவர் கூறும் போது, நாங்கள் குடும்பத்துடன் இங்கு வந்து காணும் பொங்கல் கொண்டாடி வருகிறோம். இதுவரை நாங்கள் தூத்துக்குடியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும், மணப்பாடு போன்ற பகுதிகளுக்கும் தான் சென்று வருவோம். தாமிரபரணி ஆற்றில் மருதூர் அணை சிறப்பாக உள்ளது என்பதை கேள்விபட்டேன். எனவே அணையை தேடி காரில் கலியாவூர் வந்தோம். அங்கிருந்து சிறிது தூரம் நடந்து வந்து மருதூர் அணையில் குளித்தோம். பின் அங்கேயே அமர்ந்து கொண்டு வந்த கூட்டாஞ்சோற்றை சாப்பிட்டு மகிழ்ந்தாம். நெல்லை தூத்துக்குடி மாவட்டத்திற்கு கிடையே இப்படியொரு அழகான இடம் உள்ளது என்பதை இப்போது தான் அறிந்தோம் என்று அவர் கூறினார்.
மருதூர் அணை காணும்பொங்கல் கொண்டாட ஏற்ற இடம். ஆயினும் இங்குள்ள அமலை செடிகளை வேலிகாத்தான் செடிகள் நீர்கருவை மரங்களை அகற்றினால் சிறந்ததொரு சுற்றுலா தலமாக மருதூர் அணை அமையும் என்பது பொதுமக்களின் கருத்தாகும்.


