தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித்தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடந்தது. இந்நிலையில் அதன் வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் நடந்தது.
இந்நிலையில் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளை வாக்குப்பெட்டிகள் அனைத்தும் செய்துங்கநல்லூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தன. சரியாக 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
கருங்குளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு.
1 வது வார்டு சண்முகம் புதியதமிழகம், 2வது வார்டு லெட்சுமணபெருமாள் அதிமுக, 3வது வார்டு மணிகண்டன் அமமுக, 4 வது வார்டு அண்ணாமலை அதிமுக, 5 வது வார்டு முத்துராமலிங்கம் அதிமுக, 6 வது வார்டு ராதா திமுக, 7வது வார்டு கோமதி அதிமுக, 8வது வார்டு வசந்தி திமுக, 9 வது வார்டு மைமூன் திமுக, 10வது வார்டு சுடலைமுத்து அதிமுக, 11வது வார்டு பொன்ராணி அதிமுக, 12வது வார்டு சுந்தரி திமுக, 13வது வார்டு சுப்புலெட்சுமி அமமுக, 14 வது வார்டு மாடத்தி அமமுக, 15வது வார்டு அன்னலெட்சுமி அதிமுக, 16வது வார்டு கம்மாடிச்சி திமுக வேட்பாளர்கள் முறையே வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் அதிமுக 7 இடங்களையும், திமுக 5 இடங்களையும், அமமுக 3 இடங்களையும், புதிய தமிழகம் கட்சி ஒரு இடத்தையும் பிடித்துள்ளது.


