கருங்குளம் பெருமாள் கோயில் தெருவில் கடந்த 48 வருடங்களாக யூகோ வங்கி செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த வங்கி மக்கள் செயல்பாட்டுக்காக கருங்குளம் திருச்செந்தூர் மெயின்ரோட்டில் உள்ள புதிய கட்டிடத்தில் மாற்றப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவிற்கு கோவை மண்டலத்தின் தலைமை மேலாளர் அருண் குமார் தலைமை தாங்கினார். கிளை மேலாளர் கோபால் சுப்பிரமணியன் வரவேற்றார். மண்டல மேலாளர் செல்வி நாகரத்னா குத்துவிளக்கேற்றி வங்கி அலுவலகத்தினை திறந்து வைத்தார். துணை மேலாளர் ஜெபராஜ் தொகுத்து வழங்கினார். சங்கர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். நவீன வசதிகளுடன் துவங்கப்பட்ட இந்த கிளையில் முதல கட்டமாக சுயஉதவிகுழுகளுக்கு கடன் வழங்கப்பட்டது. சேமிப்பை வலியுறுத்தும் வண்ணம் முகாம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.


