வல்லநாடு அருகே மகன்கள் முன் மயங்கி விழுந்த தந்தை இறந்தார்.
வல்லநாடு அருகே கோனார் குளத்தினை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் செல்வகுமார்(32). இவருக்கு ராமலெட்சுமி என்ற மனைவியும், சரண்(18), மதன் (6)இவர் அருகில் உள்ள காத்தாடி கம்பேனி வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் விடுமுறையான காரணத்தினால் வீட்டில் குழந்தைகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தீடீரென்று மயங்கி விழுந்தார். அவரை அங்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வல்லநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு மேல்சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு பரிசோதித்தபோது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து முறப்பநாடு போலிசார் வழக்குபதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.