கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா நடந்தது.
கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் கருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் உதயசங்கர் தலைமை வகித்தார். கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தலைமைஆசிரியர் ஆசைத்தம்பி வரவேற்றார். விலையில்லா மிதி வண்டியை ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.சண்முகநாதன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் ஒன்றிய 3 வது வார்டு கவுன்சிலர் மணிகண்டன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் செம்பூர் ராஜநாரயணன், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், முன்னாள் கவுன்சிலர் ஜான்சிராணி பாண்டியன், மாரியப்பன், கனகராஜ், வானமாமலை, ராமையா,பேச்சிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முதுகலை ஆசிரியர் பத்மா பாக்கியகுமாரி நன்றி கூறினார்.