
செய்துங்கநல்லூரில் பீமா தைக்கா கந்தூரி விழா நடந்தது.
முதல் நாள் யானை மீது அரண்மனை கொடி எடுத்து வரப்பட்டது. பீமா தைக்கா தெருவில் இருந்து ஊர்வலமாக சந்தை பக்கீர் மஸ்தான் சாகீப் ஒலியுல்லா தர்க்கா வந்து சேர்ந்தது. மறுநாள் காலை தப்ரூக் என்னும் நேர்ச்சை வழங்கப்பட்டது. அதன் பின் இரவு விளக்கு ராத்திரி பூஜை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஜோஸ் பள்ளி நிர்வாகி ஓ.பி. முஸ்தபா, டாக்டர் கலீல் ரகுமான், செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ரெகுராஜன், ஜமாத் தலைவர் அலி, பஞ்சாயத்து தலைவர்கள் வி.கோவில்பத்து கொம்பன், செய்துங்கநல்லூர் பார்வதிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தர்கா பொறுப்பாளர் கே.எஸ்.புகாரி செய்திருந்தார்.