
கருங்குளம் பகுதியில் மைக்செட் தொழில் தேக்கம் அடைந்த காரணத்தினால் அரசு உதவி செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரானா வைரஸ் பாதிப்பின் காரணமாக தொடர்ந்து 1மாதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு இருந்து வருகிறது . இந்த உத்தரவு மே 3 தேதி வரை நீடிககப்பட்டுள்ளது. இதனால் கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள மைக் செட் மற்றும் பந்தல் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறிதது வல்லகுளம் பாலன் சவுண்ட்ஸ் உரிமையாளர் ராமராஜன் கூறும்போது, எங்கள் பகுதியில் ஏப்ரல் மே காலங்களில் தான் கோயில் கொடை விழா, திருமண விழா உள்பட பல்வேறு விழாக்கள் நடைபெறும் இவ்வேளையில் மைக்செட் , பந்தல் , வாடகை பாத்திரம் என தொழில் நடைபெறும். கருங்குளம் ஒன்றியத்தினை பொறுத்தவரை இந்ததொழிலை நம்பி சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட கிராமத்து’ க்கு ஒரு மைக்செட் உள்ளது. இதை நம்பி உள்ளவர்கள் வாழ்வாதாரத்தினை முழுவதும் இழந்து உள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதிக்கப் பட்டவர்களுக்கு மத்திய மாநில அரசு உதவி வழங்கவேண்டும் என்பதே இப்பகுதியில் உள்ள மைக்செட், பந்தல், வாடகை பாத்திரங்கள் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கோரிக்கையாகவே உள்ளது.