செய்துங்கநல்லூரில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில துணைசெயலாளர் முருகன் வீட்டு முன்பு பாதகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
செய்துங்கநல்லூர் முனியசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் (43). இவர் தமிழ் நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில துணை செயலாளராக பணியாற்றி வருகிறார். கோரானா நோய்க்காக உரடங்கு உத்தரவினால் ஆட்டோ தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 15 ஆயிரம் வழங்கவேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி இவர் இன்று காலை 10.30 முதல் 10.40 வரை வீட்டு முன்பு பதாகை ஏந்தி போராட்டம் நடத்தினர். இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தினை சார்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து முருகன் கூறும்போது, அனைத்து ஏழை தொழிலாளர்களுக்கும் 7500 மற்றும் மூன்று மாதங்களுக்கு தேவையான உணவு பொருள்கள் இலவசமாக வழங்கிட வேண்டும். மேலும் தமிழ்நாடு முழுவதும் 2 லட்சத்து 55 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகிறது. அரசு தற்போது நலவாரியத்தில் பதிந்தவர்களுக்கு மட்டுமே தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் வாரியத்தில் உள்ளவர் 42 ஆயிரம் நபர்கள் மட்டுமே . எனவே மீது உள்ளவர்களுக்கும் உதவி தொகை வழங்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி இந்த அடையாள போராட்டம் அவர் அவர்கள் வீட்டு முன்பு குடும்பத்தினரோடு நடத்தினோம் என் அவர் கூறினார்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் தங்குதடையின்றி உதவி தொகை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


