கருங்குளத்தில் திருநெல்வேலி டவுண் ரோஸ்மேரி ஐடியல் பப்ளிக் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் மலையேற்ற பயிற்சி எடுத்துக்கொண்டனர்.
திருநெல்வேலி டவுண் ரோஸ்மேரி ஐடியல் பப்ளிக் ஸ்கூல் பள்ளி மாணவர்களுக்கு சாரணர் இயக்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து மலையேற்ற பயிற்சி உள்பட பல பயிற்சிகளை கருங்குளத்தில் உள்ள வகுளகிரி மலையில் நடத்தினர். பயிற்சியாளர் அதிஷ்ட ராஜ் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ஆசியரிர் ஞானராஜ் செல்லதுரை முன்னிலை வகித்தார்.
பள்ளி மாணவர்கள் வகுளகிரி மலை அடிவாரத்தில் உள்ள மோட்டார் அறை அருகில் இருந்து மலை ஏற்ற பயிற்சி நடத்தினர். தொடர்ந்து ஆபத்தான காலத்தில் தப்பிப்பது உள்பட பல பயிற்சிகள் நடந்தது. இந்த பயிற்சியில் மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரியா, பிரசாந்த் உள்பட பலர் கலந்து கொண்டர்.