கருங்குளம் ஒன்றியத்தில் அமமுக வேட்பாளர் புவனேஷ்வரன் வாக்கு சேகரித்தார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் சுற்றி பயணம் செய்தார். செய்துங்கநல்லூரில் துவங்கி ,வி.கோயில் பத்து, நாட்டார்குளம், விட்டிலாபுரம், முத்தாலங்குறிச்சி, பொந்தன்பொழி, ஆழிகுடி, அனவரதநல்லூர், வசவப்பபுரம், சென்னல்பட்டி, முறப்பநாடு, பக்கபட்டி, நாணல்காடு, அகரம் , வல்லநாடு, கிள்ளிகுளம், அனந்தநம்பி குறிச்சி, மணக்கரை, வடவல்லநாடு, கலியாவூர் ,உழக்குடி , சவலாப்பேரி, வடக்கு காரசேரி, தெய்வச் செயல்புரம் உள்பட பல பகுதியில் பிரச்சசாரம் செய்தார்.
இவர் மணக்கரையில் பேசியதாவது, மத்தியில் ஆளும் மோடி அரசு மக்களுக்கு எதிரான திட்டங்களை தீட்டி வருகிறது. ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக கூறிய மோடி 15 ரூபாய் கூட போடவில்லை. கார்பரேட் கம்பேனிக்கு விலைபோய் விட்டது. இந்த அரசில் வேலைவாய்ப்பு இல்லை. வங்கியில் நம்மை வரிசையில் நிற்க வைத்தாரே தவிர மக்களுக்கு நன்மை செய்யவில்லை. எனவே இவர்களை நமது நாட்டில் ஆட்சியை விட்டு இறக்க வேண்டும். தமிழக அரசு மோடியின் அடிமை அரசு, நமது சின்னம்மாவுக்கும், டி.டி.வி தினகரனுக்கும் துரோகம் செய்து விட்ட அரசு. இவர்களால் மக்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை. எனவே இவர்களையும் நாம் ஆட்சியை விட்டு இறக்க வேண்டும். ஒன்றரை லட்சம் மக்கள் இலங்கையில் பாதிக்கப்படுவதற்கு காரணமாக இருந்த ராஜபக்சேவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கனிமொழியும் தமிழக மக்களுக்கு எதுவும் செய்யப் போவதில்லை. எனவே எங்கள் கட்சிக்கு பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அவர் பேசினார்.
அவருடன் கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன், முன்னாள் ஓட்டப்பிடாரம் எம்.எல். சுந்தரராஜன், முன்னாள் சேர்மன் டாக்டர் கோசல்ராம் உள்பட பலர் வந்தனர்.


