
செய்துங்கநல்லூரில் சட்ட இயக்க தினம் நடந்தது.
சமுதாய நலக்கூடத்தில் நடந்த இந்த தின விழாவிற்கு மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு செயலாளர் மற்றும் சார்வு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் தலைமை தாங்கினார். ஆழ்வார் தோப்பு கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் வரவேற்றார்.
நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் பேசும் போது, கடந்த 6.07.1976 அன்று தமிழ் நாடு மாநில சட்ட ஆலோசனை குழு துவங்கப்பட்டது. மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு பொது மக்களுக்கு பல்வேறு சட்ட சேவைகள் செய்து வருகிறது. இம்மு£மில் அரசு வழங்கும் நலத் திட்டம், பெண்களுக்கான, ஜீவானாம்சம் சட்டம், விவகாரத்து சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் , என மக்களுக்காக பல பணிகளை செய்து வருகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ளவேண்டும் என பேசினார். இந்த தின விழாவில் 150 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். மக்களிடையே மனுகளை நீதிபதி சாமுவேல் பெற்று கொண்டார். இம் முகாமில் கிராம உதய தன்னார்வ தொண்டர் கண்ணன், பகுதி பொறுப்பாளர் ஜெய பார்வதி, விஜய ஏஞ்சல், விஜய குமாரி, வினோத் , செல்வ துரை, அருணா உள்பட பலர் கலந்துகொண்டனர். கிராம உதயம் தன்னார்வ தொண்டர் செல்வன் தரை நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டபணிகள் ஆணை குழு மற்றும் சிராம உதயம் மேலஆழ்வார் தோப்பு கிளை அலுவலகம் இணைந்து நடத்தி இருந்தது.