நாகர்கோயிலில் உள்ள இருளப்பபுரம் சீதாலெட்சுமி திருமண மண்டபத்தில் பிரபல எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் 80 க்கு 80 திருவிழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி எழுத்தாளர்களும் கலந்துகொண்டனர். இந்திய கம்னியூஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு விழாவை துவக்கி வைத்தார். பால பிரஜாதிபதி அடிகளார் உள்பட பலர் குத்து விளக்கு ஏற்றினர். எழுத்தாளர் ராம் தங்கம் வரவேற்றார். நாஞ்சில் நாடன் தலைமை வகித்தார். ஜோ. டி. குரூஸ், விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொன்னீலனுக்கு மணமாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. பொன்னீலன் படைப்புகள் குறித்து ஆய்வரங்கம் நடந்தது. தொடர்ந்து பொன்னீலன் 80 நூல் வெளியிட்டு விழா நடந்தது. பொன்னீலன் எழுதிய என்னை செதுக்கியவர்கள் நூலை வம்சி பதிப்பகத்தார் செல்லத்துரை ஜைலசா வெளியிட எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பெற்றுக்கொண்டார். தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழக துறை தலைவர் இரா.காமராசு, நாறும் பூ நாதர் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். எழுத்தாளர் ஜெயமோகன் நிறைவு உரையாற்றினார். நிகழ்ச்சியை எழுத்தாளர் அபிநயா ஸ்ரீகாந்த் தொகுத்து வழங்கினார். பொன்னீலன் ஏற்புரையாற்றினார்.