
கருங்குளம் ஒன்றியம் கால்வாய் & வல்லகுளம் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கால்வாய் கிராமம் மிகப்பெரிய பஞ்சாயத்தாகும். இங்கு 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில் தற்போது அரசு உயர் நிலைப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளி கால்வாய் கிராமத்தில் இருந்து வல்லகுளம் செல்லும் சாலையில் உள்ளது. இந்த பள்ளியில் தற்போது 100க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். வரும் வருடம் இந்த பள்ளி மேல் நிலைப்பள்ளியாக மாற வுள்ளது. அருகில் உள்ள வல்லகுளம், அரசர்குளம் , கிளாக்குளம், தெற்க காரசேரி, திருவரங்கப்பட்டி, கெட்டியம்மாள் புரம், அரியநாயகி புரம் உள்பட பல கிராமங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து படிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. ஆனால் இந்த பள்ளி வழியாக செல்லும் கால்வாய் & வல்லகுளம் சாலை மிக மோசமாக உள்ளது. சாலையில் உள்ள இரண்டு பாலங்கள் மிகவும் குறுகலாகவும் உடைந்த நிலையிலும்காணப்படுகிறது. இந்த சாலையில் கனரக வாகனங்கள் சென்று வர முடியவில்லை. இது குறித்து கால்வாயை சேர்ந்த சிவா கூறும் «ப்£து, கால்வாய் கிராமத்தில் மிகவும் பிரமாண்டமாக பள்ளிகட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கிராமத்துக்கு மேற்கே உள்ளது. இந்த வழியாக வாகனங்கள் செல்ல கால்வாய் & வல்லகுளம் செல்லும், பஞ்சாயத்து யூனியனுக்கு உள்பட்ட சாலை உள்ளது. இந்த சாலை போடப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. தற்போது இந்த சாலை குண்டும் குழியுமாக மிக மோசமாக உள்ளது. இதை சீர் செய்ய வேண்டும் என பல தடவை நாங்கள் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தற்போது கால்வாய் கிராமத்தில் கட்டப்பட்ட அரசு உயர் நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர உள்ளது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து மிக அதிகரிக்கும். எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சாலையை அமைத்து தர வேண்டுகிறேன்.
என்று அவர் கூறினார். இந்த சாலையை உடனே சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை கால்வாய் கிராம சபை கூட்டத்துக்கு மக்கள் குறை கேட்க வந்து கனிமொழி எம்.பியிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.