தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தினை சேர்ந்த அழகையா என்பவரது மகன் அழகுராஜன்(40). இவருக்கு திருமணமாகி பிச்சைக்கனி என்ற மனைவியும், அகிலேஷ், அஜய் என்ற 2 மகன்களும் உள்னர். இவர் அங்கு பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். இவர் வழக்கமாக அருகில் இருக்கும் கழுகுமலைக்கு சென்று பொருள்கள் வாங்கி வருவது வழக்கம். இன்று வழக்கம் போல அழகுராஜன் கழுகுமலை பஜாரில் பொருள்களை வாங்கி விட்டு, ஊருக்கு தனது டூ விலரில் கிளம்பிய பொது, தீடீரென மர்ம நபர் ஒருவர், அழகுராஜனை தாக்கி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் கழுகுமலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அழகுராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டது உயிரிழந்த அழகுராஜன் உறவினர்கள் கழுகுமலை சங்கரன்கோவில் மெயின் சாலையில் தீடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைமறியல் நடைபெற்று கொண்டு இருக்கும் போது, தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக சென்ற போது, அழகுராஜன் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை முற்றுக்கையிட்டு முறையிட்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் காவல்துறையினரை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து முற்றுக்கையிட்டவர்கள் கலைந்து சென்றனர். சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட எஸ்.பி. அருண்பாலகோபாலன், கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன், டி.எஸ்.பி.ஜெபராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.இதையெடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதற்கிடையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக கழுகுமலை கரட்டுமலையை சேர்ந்த கட்டிட தொழிலாளி பொன்னுப்பாண்டி என்பவரது மகேந்திரன்(27) என்பவர் கழுகுமலை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


