கருங்குளம் அங்காள பரமேஸ்வரியம்மன்கோயில் திருவிழா நடந்தது. 8 ம் திருவிழாவை முன்னிட்டு, காலை 6 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. அதன் பின் அம்மனுக்கு சிறப்புஅபிசேகம், அலங்காரம் பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு கலைநிகழ்சி நடந்தது அதை தொடர்ந்து அம்மன் சப்பர பவனி நடந்தது. ஊர் முழுக்க சென்று அம்மன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அதன் பின் அதிகாலை கோயிலை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை தேவர் சமுதாய மண்டக படியினர் செய்திருந்தனர்.