
வல்லநாட்டில் காசநோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வுமின் பயனீட்டுக் கட்டண அட்டை வெளியீட்டு நடந்தது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 17 முதல் 23 ம் தேதி வரை காசநோய் எதிர்ப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தேசிய காசநோயகற்றும் திட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக காசநோய் விழிப்புணர்வு இலவச மின் பயனீட்டுக் கட்டண அட்டை வெளியீட்டு விழா நடந்தது. வல்லநாடு உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் இந்த விழாவிற்கு வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி முன்னிலை வகித்தார்.
மின் அலுவலக வணிக ஆய்வாளர் முருகேசன் வரவேற்றார். காசநோயாளிகளுக்கு வழங்கப்படும் மின் பயனீட்டுக் கட்டண அட்டையை பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன் வெளியிட்டார். மின்வாரிய முதல்நிலை ஆக்க முகவர் முகமது ரபி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் நயினார், மணிகண்டன், மின்சார வாரிய பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். மின்பாதை ஆய்வாளர் பெருமாள் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.